வாங்க... வணக்கம்..! நலமா?... இப்போ நாம பாக்க போறது ரத்தத்தை பத்தி...
ஏதோ எனக்கு தெரிஞ்சதை உங்ககிட்ட சொல்லணும்.. மனசுல என்ன இருக்கோ அதை சொல்லிடறேன்..
நா ரத்த தானம் செய்ஞ்சதை நினைவு படுத்தி பாக்கறேன்...
ஆளாளுக்கு ஒரு பயமுறுத்தி வச்சதுலாம் ஒரு நினைவுக்கு வந்துட்டு போச்சு... முத தடவ ரத்தம் குடுக்கறோம்னு நினைச்சு ஒரு பயம்..
அது என்ன அப்பூடி பயம்னு பார்த்தா.. மத்தவங்க சொன்னதுல ருந்து தான் அப்பூடி பயந்து போயிருந்தேன்...
- அங்கிட்டு ஒருத்தன் ரத்தம் குடுக்கும்போது அப்படியே தல கிறு கிறு னு சுத்துதுன்னு மயங்கி விழுந்துட்டான்.. ஆளு அப்புறம் அரைமணி நேரத்துக்கு சவம் போல படுத்துட்டு தான் இருந்தான்...
- சும்மா வா எடுப்பான் மூணு சொம்பு அளவுல ரத்தத்தை எடுத்தாக அப்பூடித்தான் ஆவும்...
இப்படில்லாம் நம்ம காது படவே பேசிடுவாங்க... நம்ம சனங்க ஒன்னு மில்லாததை பத்தா பதினஞ்சா பேசுவாங்க... அப்புறம் அது உண்மைதானா ன்னு சம்பந்தம்பட்டவங்க யோசிக்க வேண்டியதுதான்...
அப்புறம் ஒரு வழியா தெம்பு சேர்த்துண்டு ரத்தம் குடுக்க போனேன்... அறுவை சிகிச்சைக்கு போகிறது போல இருந்துச்சு... மனசுல வேற பக் பக் னு அடிச்சுகுச்சு... பாத்துடலாம் என்ன தான் பண்ணிபுடுவாங்கன்னு... மனசை தேத்திக்கிட்டு போறேன்...
அதுக்கு முன்னால ஒரு அப்ளிகேசன் குடுத்தாங்க. ரத்தவகை என்ன?, பேரு என்ன?, முகவரி?, ரத்த சம்பந்தமான வியாதி(மலேரியா, டைபாய்டு...)லாம் சமீபத்துல வந்துச்சா?..ன்னுலாம் இருந்துச்சு. நிரப்பி குடுத்துட்டு, காத்திருந்தேன்.
தம்பி இங்க வாப்பா?..ன்னு ஒருத்தர் கூப்டார். இடக்கை மோதிரவிரல் நுனில ஆல்கஹால் தடவின பஞ்சு வச்சு சுத்தம் செய்துட்டு, அடுத்து என்ன செய்ய போறாங்கன்னு கணிக்கறதுக்குள்ள... சுருக் னு ஒரு ஊசியால குத்தி அந்த மோதிர விரல நல்லா ரத்தம் வர்றதுக்காக அழுத்தினார்... அட மடப்பயலே... ஊசியால குத்த போறேன் னு ஒரு வார்த்தையாவது சொல்றதில்லையா ன்னு ஒரு கோவம் வந்துச்சு... ரத்தத்தை சோதனை பண்ண கண்ணாடியில் மோதிர விரல்ல வந்த ரத்தத்தை தோய்ச்சு எடுத்துகிட்டாங்க. அப்பால ரத்தம் நிக்கறதுக்காக பஞ்சு வச்சு விட்டாங்க.
அட... ஆரம்பத்துலயே இப்படிலாமா பயந்துகிட்டா எப்படி ன்னு மனச தேத்திக்கிட்டு ரத்த தானம் பற்றி சுவத்துல இருந்த நோட்டிஸ்லாம் படிச்சுட்டு வந்தேன்...
அந்த நேரம்... ரத்ததானம் குடுத்து வெளில ஒரு ஆளு "எனக்கு தல கிறு கிறுன்னு சுத்துது"ன்னான்..
அவன் அப்படி அந்த இடத்தில உக்காந்துட்டான்.
அடுத்து என்னை கூப்பிடும் முறை வந்தது..
உடம்பு உதற ஆரம்பித்தது... (தொடரும்..!)
ஏண்டா, நீ என்ன ஹாரர் கதையா எழுதற? முக்கியமான இடத்துல தொடரும்னு போட்டு பயமுறுத்தற.புதுசா ரத்தம் குடுக்கறவன் இதை பார்த்தா பயந்துட மாட்டானா? முழுசா எழுதுடா.ஆனாலும் இந்த அனுபவ பகிர்வு நல்ல விஷயம். சரியா செய்.
ReplyDeleteஅன்பின் வேல் - எந்தக் காலத்தில் இருக்கிறாய் - இப்பொழுது இரத்த தானம் பற்றி அறியாதவன் இருக்க இயலாது. விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete