Sunday, 15 May 2011

வணக்கம்

வாங்க வணக்கம்... நல்லா இருக்கீங்களா? வீட்டுல எல்லோரும் சவுக்கியமா? அப்படின்னு நேர்ல சந்திச்சு பேசுறத விட... இப்போ வந்த அறிவியல் வளர்ச்சியினாலே... நிறைய பேரு சந்திக்கிறதை விட... பேசுறது தான் அதிகம்..

என்னது சந்திப்பை விட பேசறது எப்படி அதிகம் னு யோசிக்கறீங்களா?.. அதான் இப்போலாம் எல்லோரும் செல் வச்சுருக்கோமே... அதான் நாம பேசுறது அதிகம் னு சொன்னேன்...இப்போ என்ன விஷயம் னா... நம்ம தமிழ் நாட்டுல தமிழ்பேச கூச்சப்படறவங்களாம் அதிகமாய்ட்டாங்கோ... தமிழ்கூடவே ஆங்கில கலப்பில பேசறவங்கதான் அதிகம்... ஒரு அரைமணிநேரம் யாருடனயாவது பேசினாலே அவர் ஒரு 20 வார்த்தைகளாவது ஆங்கிலம் கலந்த தமிழில் பேசிவிடுகிறார்..தொலைபேசி போய் செல்பேசி வந்தது போல... தமிழிலேயே பேசுவது போய் தமிங்கிலீஸ் என்று புது மொழியில் தான் நம்மவர்கள் பேசுகிறார்கள்.. கேட்டால் எல்லோரும் பேசறாங்க அப்புடித்தான் பேசுவோம்... எல்லோரும் சுத்த தமிழில் பேசினால் தான் நானும் பேச முடியும்... னு சொல்வாங்க.. அட சாக்கு போக்கு நமக்கா வராது...ஹூம்...!

முடிஞ்ச வரையில் நாம் ஆரம்பிப்போம்... சின்ன முயற்சியில்... என்னவெனில்... தொலைபேசியில் ஆரம்பிப்பதோ, செல்பேசியில் ஆரம்பிப்பதோ... ஹலோ என்று அழைக்காமல், "வணக்கம்" என்றோ, "வாழிய நலம்" என்றோ, "வாழ்க" என்றோ அழைப்போமே... சின்ன முயற்சி தானே... செய்யலாமே... இதனுடனே... விடைபெறும் போது "பை" என்று சொல்லாமல், "இன்னும் பிறகு பேசுவோம்" என்றோ, "வாழ்க வளமுடன்" என்றோ, "வாழ்க நலமுடன்" என்றோ விடைபெறுவோம்.

5 comments:

  1. அன்பின் சண்முக வேல் - அருமையான துவக்கம் - அழகான வடிவமைப்பு. தமிழை வளர்க்கும் விதமாக முதலில் அலைபேசியிலோ அல்லது தொலைபேசியிலோ எவ்வாறு பேசலாம் என்பதைப் பற்றிய இடுகை நன்று. நலமே விளைக ! நல்வாழ்த்துகள் வேல் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. எரிச்சல் ஊட்டும் வேர்டு வெரிஃபிகேஷனை எடுத்து விடு நண்பா

    ReplyDelete
  3. வணக்கம். வலைப்பதிவர் உலகம் வரவேற்கிறது. அருமையான முயற்சி. நல்ல துவக்கம். சிறப்பாக செயல்படுவாய். நம்பிக்கை இருக்கிறது. வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  4. இனிய சீனா அவர்களே, தங்களின் மேலான கருத்தின்படி, வோர்ட் வெரிபிகேஷன் என்பதை எடுத்தாச்சு.. சுட்டியமைக்கு, நன்றியும் மகிழ்வும்!

    ReplyDelete
  5. பிசியான ரசிகன் அவர்களே, நேரம் ஒதுக்கி வந்து வாழ்த்தியமைக்கு, வணக்கங்கள்... உங்க வாழ்த்தினை போல ஊக்கம் தருவது வேறேது?..

    ReplyDelete