Sunday, 22 May 2011

ரத்தம்-2


வணக்கம்... வாங்க நலமா?... 

போன தடவை எழுதனதோட தொடர்ச்சி... அடுத்ததா எழுதறது... அத படிச்சிட்டீங்கனா தொடருங்க...!

ரத்த தானம் கொடுக்க போயிருந்த போது, என்முறை வர, எனக்கு பயம் ஏற்படறவரைக்கும் எழுதியிருந்தேன்...

எத்தனையோ பேரு ரத்த தானம் செய்யலயா?.. அவங்களாம் கொடுத்தத பத்தி பெருமையா தான் பேசுவாங்க... கொடுக்காதவங்கதான் நம்மளை பயமுறுத்திருப்பாங்கன்னு ஒரு தெம்பு எப்படி தான் எனக்கு அந்த நேரத்தில் ஏற்பட்டுச்சுன்னு தெரியல...

ரத்த அழுத்தம் செய்றதுக்கு முன்னால நம்ம தோள்பட்டைல ரத்த அழுத்த கருவி வச்சு, ரத்த அழுத்தம் சரியான அளவுல இருக்கான்னு பார்த்தாங்க...

எனக்கு பயம் இருந்துச்சுன்னு அவங்களுக்கு எப்படியோ தெரிஞ்சு போச்சு போல...

சகஜமாக்கறதுக்காக... என்ன செய்யறீங்க... எந்த ஊருன்னு சும்மா பேச்சு கொடுத்தாங்க... அப்படியே முத தடவை இப்போதான் ரத்த தானம் செய்யறீங்களா ன்னு விசாரிச்சாங்க.

சகஜமா ஆனதுக்கு அப்புறம், ரத்த அழுத்த கருவி வச்சு ரத்த அழுத்தம் பார்த்துகிட்டே, ரத்தம் எடுக்கற பையை எடுத்தாங்க. 

கை முட்டி கீழ் பக்கம் வைத்து, அதன் மேல் பக்கம் ஒரு அழுத்தம் குடுத்து, அந்த இடத்துல நரம்பு புடைக்க வச்சு, அந்த நரம்புல ரத்தப்பையோட இணைஞ்ச ஊசியால குத்தினாங்க. சுருக் னு வலிச்சது. முதல்ல ரத்த வகை பாக்க குத்தின சுருக்க விட இந்த சுருக் கொஞ்சம் அதிகமாவே இருந்தது. முழங்கைக்கு மேல நரம்பு தெரியறத்துக்காக இறுக்கமா கட்டின கட்டு அப்படியே இருந்ததால கை மரத்துப் போச்சு. வலி தெரியல.. உடனே ஊசி குத்தின கை ல, உள்ளங்கைல ஒரு பந்து போல புடிக்க (ஸ்பாஞ்ச் போல) குடுத்தாங்க. அத புடிச்சி புடிச்சி விடணுமாம். கொஞ்சம் மரத்து போறது விட்டது.. 

ரத்தம் சிறிது சிறிதாக எடுத்தாங்க... நமக்கு காயம் பட்டா ரத்தம் வேகமா வர்றதுக்கும் ரத்த தானம் குடுக்கும் போது ரத்தம் வர்றதுக்கும் வித்தியாசம் இருக்கும் ன்றது அப்போதான் தெரிஞ்சது...

ஒரு கால் மணி நேரத்துக்கெல்லாம் ரத்தம் எடுத்து முடிச்சிட்டாங்க. எழுந்து நின்னா லேசா தலை சுத்தறா  மாதிரி இருக்கு...  ஏற்கனவே எவனோ ஒருத்தன் தலை சுத்தும் னு சொல்லி பயமுறுத்தி வச்சதால இப்படி இருக்கோணு யோசிக்கும் போதே குடிக்க ஜூஸ் குடுத்தாங்க.  குடிச்சுட்டு பாத்தா தலையெல்லாம் சுத்தலை. பூமி மட்டும் தான் சுத்துது. வெளிய வந்தா, நோயாளியோட சொந்தக் காரங்க நம்மள என்னமோ கடவுள் ரேஞ்சுக்கு தூக்கி வச்சு பேசினாங்க. எனக்கு இப்போ பறக்கற மாதிரி இருந்தது. சுருக்குன்ன வலியெல்லாம் சுத்தமா மறந்து போச்சு. நம்மால ஒரு உயிரை காப்பாத்த முடியும்னா சுருக்குன்ற வலியெல்லாம் சும்மா பாஸூ.  மறுபடி ரத்தம் வேணும்னா கூப்பிடுங்க தரேன்னு சொல்லிட்டு வந்தேன். 


யாருலாம் ரத்ததானம் செய்யலாம், கூடாதுன்னு தெரியுங்களா..!

  • உங்க வயசு 18 லிருந்து 60 குள்ள இருக்கணும்..
  • உங்க எடை குறைஞ்ச பச்சம் 45 கிலோ வாவது இருக்கணும்...
  • உங்களுக்கு குடிக்கற பழக்கம்  இல்லாம இருந்தா நல்லது. இருந்தாலும் கடைசி 48 மணி நேரத்துல குடித்திருக்க கூடாது...
  • 6 மாசத்துக்குள்ள டைபாய்ட் காய்ச்சல் வந்தவங்க, இன்சுலின் ஊசி போட்டுகறவங்க, 6 மாசத்துக்குள்ள ஆப்பரேஷன் ஆனவங்க, சமீபத்துல குழந்தை பெத்த அம்மா இவங்கல்லாம் ரத்த தானம் குடுக்க கூடாது.
  • ரத்த அழுத்தம் சீரா இருக்கறவங்க தான் குடுக்க முடியும். ரத்தத்துல ஹீமோகுளோபின் அளவு சரியா இருந்தா தான் ரத்தமே எடுப்பாங்க. 
  • கடைசியா முத்தாய்ப்பா ஒரு விஷயம் என்னன்னா, நீங்க குடுக்கற ரத்தம் 3 பேரை கூட காப்பத்தக்கூடியது...

ஆக இந்த வலைத்தளத்தை படிச்சவங்க அவங்கவங்க ரத்த வகை தெரிஞ்சு வச்சுகிட்டு, ரத்த தானம் செய்ய எந்த விதமான வீண்பயத்தோடவும், மனப்பதட்டத்தோடவும் போகாம, தைரியமா குடுக்க உதவியாய் இருக்கும் னு நம்பறேன்... நன்றி வணக்கம்.. மீண்டும் எழுதறேன்..!

2 comments:

  1. இரத்த தானம் மகத்தான் சேவை வேல் - நானெல்லாம் கணக்கில்லாமல் கொடுத்திருக்கிறேன். டிமாண்ட் அதிகம் எனது குரூப்பிற்கு. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. மிக நல்ல விஷயம் பற்றி சொல்லி இருக்கீங்க...இது போன்ற பகிர்வுகள் தொடர்ந்து எழுதலாமே...

    நன்றி வாழ்த்துக்கள்

    ReplyDelete