<blockquote class="trendlyne-widgets" data-get-url="https://trendlyne.com/web-widget/swot-widget/Poppins/PPL/?posCol=00A25B&primaryCol=006AFF&negCol=EB3B00&neuCol=F7941E" data-theme="light"></blockquote><script async src="https://cdn-static.trendlyne.com/static/js/webwidgets/tl-widgets.js" charset="utf-8"> </script>
Sunday, 17 November 2024
Monday, 31 October 2011
புதிய பழக்கம்!
தலைப்புக்கு ஒரு சந்தேகம்.! புது பழக்கம் னு எழுதறதா? புதிய பழக்கம் னு எழுதறதா ன்னு தான்..!
எதுனு படிக்கற நீங்க விவாதகளமா போடறதா இருந்தா போடுங்க...!
அல்லது எதுதான் சரியானது என்று எடுத்து காட்டுங்க..!
பல்லு போச்சுன்னா சொல்லு போச்சு ன்னு நம்ம அவ்வை பாட்டி சொல்லிருப்பாங்க. அந்த பல்லு மேட்டருதான் இப்போ நம்ம டாபிக்.!
அந்த காலத்து வேப்பங்குச்சி, ஆலங்குச்சி, அரசங்குச்சி வச்சு இன்னமும் தேச்சுக்கறவங்களுக்குலாம் நம்ம சப்ஜெக்ட் ஒத்துவராது.. இருந்தாலும் படிச்சுக்கலாம்..!
என்னதான் அம்மாம்பெரிய டூத்பேஸ்ட் ட (பவர்புல்லா) இருந்தாலும், நம்க்கு அது 12 மணிநேரம் தான் செல்லுபடியாகும்... அதாவது, நீங்க காலைல 6 மணிக்கு பல்லு விளக்கினீங்கனா, மாலை 6 மணி வரைக்கும் தான் அது 'சுத்த'மானதாம்.! அதுக்கு பிறகு, நாம பல்லு விளக்காத குழந்தை போல(அட கடவுளே எப்படிலாம் ஒரு உதாரணம்!)
நமக்கு உதாரணமா முக்கியம்...! இரவுல படுத்துக்க போறதுக்கு முன்னாடி ஒரு தடவை பல்லு தேய்க்கறது( ஒரு பத்து நிமிடம் ஆகுமா?.. ன்னு சோம்பலா இருந்தா உங்களையே நீங்க கேட்டுக்கோங்க..!) ரொம்ப ரொம்ப நல்லது...
ஒரு பத்து நிமிடத்தை ஒரு நாள்ல உங்களால ஒதுக்க முடியாதா என்ன?...
இரவுல பல்லு விளக்காததால தான் சொத்தைப்பல்லு வருவதுக்கு முக்கிய காரணம்னு நம்ம எல்லோருக்கும் தெரியும்...! தெரிஞ்சு தான் வேணும்னே நாம ஒரு பல்லு மேட்டர்ல அலட்சியம் காமிச்சுக் கறோம்..! இனி இப்படி இருக்கலாமா ன்னு நீங்களே கேட்டுக்கோங்க..!
உங்க ஆரோக்கியத்துல உங்களுக்கு அக்கறையில்லைனா(உங்களுக்கேவா?), மத்தவங்களுக்கும் அக்கறை இருக்கணும்னு எதிர்பார்க்க முடியுமா?...
நாம வாழ்வது ஒரு முறை... நல்லா பல்லு தேச்சு ஒருநாளை ஆரம்பிச்சது போல, பல்லு தேச்சுட்டு தூங்க பழகலாமே..!
சிந்திப்போம். செயல்படுத்துவோம்..(இன்னும் இதுபோல வரும்..!)
எதுனு படிக்கற நீங்க விவாதகளமா போடறதா இருந்தா போடுங்க...!
அல்லது எதுதான் சரியானது என்று எடுத்து காட்டுங்க..!
பல்லு போச்சுன்னா சொல்லு போச்சு ன்னு நம்ம அவ்வை பாட்டி சொல்லிருப்பாங்க. அந்த பல்லு மேட்டருதான் இப்போ நம்ம டாபிக்.!
அந்த காலத்து வேப்பங்குச்சி, ஆலங்குச்சி, அரசங்குச்சி வச்சு இன்னமும் தேச்சுக்கறவங்களுக்குலாம் நம்ம சப்ஜெக்ட் ஒத்துவராது.. இருந்தாலும் படிச்சுக்கலாம்..!
என்னதான் அம்மாம்பெரிய டூத்பேஸ்ட் ட (பவர்புல்லா) இருந்தாலும், நம்க்கு அது 12 மணிநேரம் தான் செல்லுபடியாகும்... அதாவது, நீங்க காலைல 6 மணிக்கு பல்லு விளக்கினீங்கனா, மாலை 6 மணி வரைக்கும் தான் அது 'சுத்த'மானதாம்.! அதுக்கு பிறகு, நாம பல்லு விளக்காத குழந்தை போல(அட கடவுளே எப்படிலாம் ஒரு உதாரணம்!)
நமக்கு உதாரணமா முக்கியம்...! இரவுல படுத்துக்க போறதுக்கு முன்னாடி ஒரு தடவை பல்லு தேய்க்கறது( ஒரு பத்து நிமிடம் ஆகுமா?.. ன்னு சோம்பலா இருந்தா உங்களையே நீங்க கேட்டுக்கோங்க..!) ரொம்ப ரொம்ப நல்லது...
ஒரு பத்து நிமிடத்தை ஒரு நாள்ல உங்களால ஒதுக்க முடியாதா என்ன?...
இரவுல பல்லு விளக்காததால தான் சொத்தைப்பல்லு வருவதுக்கு முக்கிய காரணம்னு நம்ம எல்லோருக்கும் தெரியும்...! தெரிஞ்சு தான் வேணும்னே நாம ஒரு பல்லு மேட்டர்ல அலட்சியம் காமிச்சுக் கறோம்..! இனி இப்படி இருக்கலாமா ன்னு நீங்களே கேட்டுக்கோங்க..!
உங்க ஆரோக்கியத்துல உங்களுக்கு அக்கறையில்லைனா(உங்களுக்கேவா?), மத்தவங்களுக்கும் அக்கறை இருக்கணும்னு எதிர்பார்க்க முடியுமா?...
நாம வாழ்வது ஒரு முறை... நல்லா பல்லு தேச்சு ஒருநாளை ஆரம்பிச்சது போல, பல்லு தேச்சுட்டு தூங்க பழகலாமே..!
சிந்திப்போம். செயல்படுத்துவோம்..(இன்னும் இதுபோல வரும்..!)
Sunday, 22 May 2011
ரத்தம்-2
வணக்கம்... வாங்க நலமா?...
போன தடவை எழுதனதோட தொடர்ச்சி... அடுத்ததா எழுதறது... அத படிச்சிட்டீங்கனா தொடருங்க...!
ரத்த தானம் கொடுக்க போயிருந்த போது, என்முறை வர, எனக்கு பயம் ஏற்படறவரைக்கும் எழுதியிருந்தேன்...
எத்தனையோ பேரு ரத்த தானம் செய்யலயா?.. அவங்களாம் கொடுத்தத பத்தி பெருமையா தான் பேசுவாங்க... கொடுக்காதவங்கதான் நம்மளை பயமுறுத்திருப்பாங்கன்னு ஒரு தெம்பு எப்படி தான் எனக்கு அந்த நேரத்தில் ஏற்பட்டுச்சுன்னு தெரியல...
ரத்த அழுத்தம் செய்றதுக்கு முன்னால நம்ம தோள்பட்டைல ரத்த அழுத்த கருவி வச்சு, ரத்த அழுத்தம் சரியான அளவுல இருக்கான்னு பார்த்தாங்க...
எனக்கு பயம் இருந்துச்சுன்னு அவங்களுக்கு எப்படியோ தெரிஞ்சு போச்சு போல...
சகஜமாக்கறதுக்காக... என்ன செய்யறீங்க... எந்த ஊருன்னு சும்மா பேச்சு கொடுத்தாங்க... அப்படியே முத தடவை இப்போதான் ரத்த தானம் செய்யறீங்களா ன்னு விசாரிச்சாங்க.
சகஜமா ஆனதுக்கு அப்புறம், ரத்த அழுத்த கருவி வச்சு ரத்த அழுத்தம் பார்த்துகிட்டே, ரத்தம் எடுக்கற பையை எடுத்தாங்க.
கை முட்டி கீழ் பக்கம் வைத்து, அதன் மேல் பக்கம் ஒரு அழுத்தம் குடுத்து, அந்த இடத்துல நரம்பு புடைக்க வச்சு, அந்த நரம்புல ரத்தப்பையோட இணைஞ்ச ஊசியால குத்தினாங்க. சுருக் னு வலிச்சது. முதல்ல ரத்த வகை பாக்க குத்தின சுருக்க விட இந்த சுருக் கொஞ்சம் அதிகமாவே இருந்தது. முழங்கைக்கு மேல நரம்பு தெரியறத்துக்காக இறுக்கமா கட்டின கட்டு அப்படியே இருந்ததால கை மரத்துப் போச்சு. வலி தெரியல.. உடனே ஊசி குத்தின கை ல, உள்ளங்கைல ஒரு பந்து போல புடிக்க (ஸ்பாஞ்ச் போல) குடுத்தாங்க. அத புடிச்சி புடிச்சி விடணுமாம். கொஞ்சம் மரத்து போறது விட்டது..
ரத்தம் சிறிது சிறிதாக எடுத்தாங்க... நமக்கு காயம் பட்டா ரத்தம் வேகமா வர்றதுக்கும் ரத்த தானம் குடுக்கும் போது ரத்தம் வர்றதுக்கும் வித்தியாசம் இருக்கும் ன்றது அப்போதான் தெரிஞ்சது...
ஒரு கால் மணி நேரத்துக்கெல்லாம் ரத்தம் எடுத்து முடிச்சிட்டாங்க. எழுந்து நின்னா லேசா தலை சுத்தறா மாதிரி இருக்கு... ஏற்கனவே எவனோ ஒருத்தன் தலை சுத்தும் னு சொல்லி பயமுறுத்தி வச்சதால இப்படி இருக்கோணு யோசிக்கும் போதே குடிக்க ஜூஸ் குடுத்தாங்க. குடிச்சுட்டு பாத்தா தலையெல்லாம் சுத்தலை. பூமி மட்டும் தான் சுத்துது. வெளிய வந்தா, நோயாளியோட சொந்தக் காரங்க நம்மள என்னமோ கடவுள் ரேஞ்சுக்கு தூக்கி வச்சு பேசினாங்க. எனக்கு இப்போ பறக்கற மாதிரி இருந்தது. சுருக்குன்ன வலியெல்லாம் சுத்தமா மறந்து போச்சு. நம்மால ஒரு உயிரை காப்பாத்த முடியும்னா சுருக்குன்ற வலியெல்லாம் சும்மா பாஸூ. மறுபடி ரத்தம் வேணும்னா கூப்பிடுங்க தரேன்னு சொல்லிட்டு வந்தேன்.
யாருலாம் ரத்ததானம் செய்யலாம், கூடாதுன்னு தெரியுங்களா..!
- உங்க வயசு 18 லிருந்து 60 குள்ள இருக்கணும்..
- உங்க எடை குறைஞ்ச பச்சம் 45 கிலோ வாவது இருக்கணும்...
- உங்களுக்கு குடிக்கற பழக்கம் இல்லாம இருந்தா நல்லது. இருந்தாலும் கடைசி 48 மணி நேரத்துல குடித்திருக்க கூடாது...
- 6 மாசத்துக்குள்ள டைபாய்ட் காய்ச்சல் வந்தவங்க, இன்சுலின் ஊசி போட்டுகறவங்க, 6 மாசத்துக்குள்ள ஆப்பரேஷன் ஆனவங்க, சமீபத்துல குழந்தை பெத்த அம்மா இவங்கல்லாம் ரத்த தானம் குடுக்க கூடாது.
- ரத்த அழுத்தம் சீரா இருக்கறவங்க தான் குடுக்க முடியும். ரத்தத்துல ஹீமோகுளோபின் அளவு சரியா இருந்தா தான் ரத்தமே எடுப்பாங்க.
- கடைசியா முத்தாய்ப்பா ஒரு விஷயம் என்னன்னா, நீங்க குடுக்கற ரத்தம் 3 பேரை கூட காப்பத்தக்கூடியது...
Friday, 20 May 2011
ரத்தம்
வாங்க... வணக்கம்..! நலமா?... இப்போ நாம பாக்க போறது ரத்தத்தை பத்தி...
ஏதோ எனக்கு தெரிஞ்சதை உங்ககிட்ட சொல்லணும்.. மனசுல என்ன இருக்கோ அதை சொல்லிடறேன்..
நா ரத்த தானம் செய்ஞ்சதை நினைவு படுத்தி பாக்கறேன்...
ஆளாளுக்கு ஒரு பயமுறுத்தி வச்சதுலாம் ஒரு நினைவுக்கு வந்துட்டு போச்சு... முத தடவ ரத்தம் குடுக்கறோம்னு நினைச்சு ஒரு பயம்..
அது என்ன அப்பூடி பயம்னு பார்த்தா.. மத்தவங்க சொன்னதுல ருந்து தான் அப்பூடி பயந்து போயிருந்தேன்...
- அங்கிட்டு ஒருத்தன் ரத்தம் குடுக்கும்போது அப்படியே தல கிறு கிறு னு சுத்துதுன்னு மயங்கி விழுந்துட்டான்.. ஆளு அப்புறம் அரைமணி நேரத்துக்கு சவம் போல படுத்துட்டு தான் இருந்தான்...
- சும்மா வா எடுப்பான் மூணு சொம்பு அளவுல ரத்தத்தை எடுத்தாக அப்பூடித்தான் ஆவும்...
இப்படில்லாம் நம்ம காது படவே பேசிடுவாங்க... நம்ம சனங்க ஒன்னு மில்லாததை பத்தா பதினஞ்சா பேசுவாங்க... அப்புறம் அது உண்மைதானா ன்னு சம்பந்தம்பட்டவங்க யோசிக்க வேண்டியதுதான்...
அப்புறம் ஒரு வழியா தெம்பு சேர்த்துண்டு ரத்தம் குடுக்க போனேன்... அறுவை சிகிச்சைக்கு போகிறது போல இருந்துச்சு... மனசுல வேற பக் பக் னு அடிச்சுகுச்சு... பாத்துடலாம் என்ன தான் பண்ணிபுடுவாங்கன்னு... மனசை தேத்திக்கிட்டு போறேன்...
அதுக்கு முன்னால ஒரு அப்ளிகேசன் குடுத்தாங்க. ரத்தவகை என்ன?, பேரு என்ன?, முகவரி?, ரத்த சம்பந்தமான வியாதி(மலேரியா, டைபாய்டு...)லாம் சமீபத்துல வந்துச்சா?..ன்னுலாம் இருந்துச்சு. நிரப்பி குடுத்துட்டு, காத்திருந்தேன்.
தம்பி இங்க வாப்பா?..ன்னு ஒருத்தர் கூப்டார். இடக்கை மோதிரவிரல் நுனில ஆல்கஹால் தடவின பஞ்சு வச்சு சுத்தம் செய்துட்டு, அடுத்து என்ன செய்ய போறாங்கன்னு கணிக்கறதுக்குள்ள... சுருக் னு ஒரு ஊசியால குத்தி அந்த மோதிர விரல நல்லா ரத்தம் வர்றதுக்காக அழுத்தினார்... அட மடப்பயலே... ஊசியால குத்த போறேன் னு ஒரு வார்த்தையாவது சொல்றதில்லையா ன்னு ஒரு கோவம் வந்துச்சு... ரத்தத்தை சோதனை பண்ண கண்ணாடியில் மோதிர விரல்ல வந்த ரத்தத்தை தோய்ச்சு எடுத்துகிட்டாங்க. அப்பால ரத்தம் நிக்கறதுக்காக பஞ்சு வச்சு விட்டாங்க.
அட... ஆரம்பத்துலயே இப்படிலாமா பயந்துகிட்டா எப்படி ன்னு மனச தேத்திக்கிட்டு ரத்த தானம் பற்றி சுவத்துல இருந்த நோட்டிஸ்லாம் படிச்சுட்டு வந்தேன்...
அந்த நேரம்... ரத்ததானம் குடுத்து வெளில ஒரு ஆளு "எனக்கு தல கிறு கிறுன்னு சுத்துது"ன்னான்..
அவன் அப்படி அந்த இடத்தில உக்காந்துட்டான்.
அடுத்து என்னை கூப்பிடும் முறை வந்தது..
உடம்பு உதற ஆரம்பித்தது... (தொடரும்..!)
Sunday, 15 May 2011
வணக்கம்
வாங்க வணக்கம்... நல்லா இருக்கீங்களா? வீட்டுல எல்லோரும் சவுக்கியமா? அப்படின்னு நேர்ல சந்திச்சு பேசுறத விட... இப்போ வந்த அறிவியல் வளர்ச்சியினாலே... நிறைய பேரு சந்திக்கிறதை விட... பேசுறது தான் அதிகம்..
என்னது சந்திப்பை விட பேசறது எப்படி அதிகம் னு யோசிக்கறீங்களா?.. அதான் இப்போலாம் எல்லோரும் செல் வச்சுருக்கோமே... அதான் நாம பேசுறது அதிகம் னு சொன்னேன்...இப்போ என்ன விஷயம் னா... நம்ம தமிழ் நாட்டுல தமிழ்பேச கூச்சப்படறவங்களாம் அதிகமாய்ட்டாங்கோ... தமிழ்கூடவே ஆங்கில கலப்பில பேசறவங்கதான் அதிகம்... ஒரு அரைமணிநேரம் யாருடனயாவது பேசினாலே அவர் ஒரு 20 வார்த்தைகளாவது ஆங்கிலம் கலந்த தமிழில் பேசிவிடுகிறார்..தொலைபேசி போய் செல்பேசி வந்தது போல... தமிழிலேயே பேசுவது போய் தமிங்கிலீஸ் என்று புது மொழியில் தான் நம்மவர்கள் பேசுகிறார்கள்.. கேட்டால் எல்லோரும் பேசறாங்க அப்புடித்தான் பேசுவோம்... எல்லோரும் சுத்த தமிழில் பேசினால் தான் நானும் பேச முடியும்... னு சொல்வாங்க.. அட சாக்கு போக்கு நமக்கா வராது...ஹூம்...!
முடிஞ்ச வரையில் நாம் ஆரம்பிப்போம்... சின்ன முயற்சியில்... என்னவெனில்... தொலைபேசியில் ஆரம்பிப்பதோ, செல்பேசியில் ஆரம்பிப்பதோ... ஹலோ என்று அழைக்காமல், "வணக்கம்" என்றோ, "வாழிய நலம்" என்றோ, "வாழ்க" என்றோ அழைப்போமே... சின்ன முயற்சி தானே... செய்யலாமே... இதனுடனே... விடைபெறும் போது "பை" என்று சொல்லாமல், "இன்னும் பிறகு பேசுவோம்" என்றோ, "வாழ்க வளமுடன்" என்றோ, "வாழ்க நலமுடன்" என்றோ விடைபெறுவோம்.
Subscribe to:
Posts (Atom)